வைத்தியக்கல்லூரிக்கு தெரிவான முதல் முஸ்லிம் மாணவி ஸப்ரா
பம்மனையிலிருந்து வைத்தியக்கல்லூரிக்கு
தெரிவான முதல் முஸ்லிம் மாணவி முஹம்மது
சப்ரி பாத்திமா ஸப்ரா
பம்மனையிலிருந்து வைத்திய பீடத்திற்கு தெரிவான முதல் முஸ்லிம் மாணவி முஹம்மது சப்ரி பாத்திமா ஸப்ரா
வைத்திய பீடத்திற்கு தெரிவான இவர்
முஹம்மது ஹாமீன் முஹம்மது சப்ரி (மௌலவி) அவர்களினதும் பம்மனைஅல்-கமர் மத்திய கல்லூரியில் கல்வி
போதிக்கும் நூருல் நசீமா ஆசிரியையினதும் மகள் ஆவார்.
பாத்திமா ஸப்ரா தனது ஆரம்ப கல்வியை பம்மன்ன அல் கமர் மத்திய கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் எலபடகம அல் அமீன் மத்திய கல்லூரியில் மூன்றாம் தரத்தில் கல்வி பயின்று. மீண்டும் அல் - கமர் மத்திய கல்லூரியில் தரம் நான்கில் இணைந்தார். 2010 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து. சாதாரண தரம் வரை பம்மன்ன அல்-கமர் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். 2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) ப் பரீட்சையில் 9 A சித்திகளை பெற்று கல்லூரியில் முதல் முறையாக 9 A சித்திகளை பெற்ற மாணவி என்ற பெருமையையும் கல்லூரிக்கு சேர்த்தார். தனது உயர் கல்வியை உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கற்க வேண்டும் என முடிவெடுத்தார்.
உயிரியல் விஞ்ஞானப் பிரிவு பம்மன்னை
அல்- கமர் மத்திய கல்லூரியில் இல்லாத காரணத்தினால் கெகுணகொல்ல தேசிய பாடசாலையில்
உயர் கல்விக்காக இணைந்து கொண்டார். தனது
உயர்தர கல்வியை மேற்கொள்கின்ற இரண்டாவது வருட மாணவியாக இருக்கும் போது தனது
தந்தையின் திடீர் உயிரிழப்பு காரணமாக
பல்வேறு இன்னல்களுக்கும், மனத்தாக்கத்துக்கும் ஆளானார்.
ஆனால் தனது ஒரே நோக்கம் ஒரு வைத்தியராக வேண்டும்
எனவும் தனது தந்தையின் ஆசை அதுவே என்ற
காரணத்தினாலும் இடைவிடாது தனது கல்வியைத் தொடர்ந்தார். ‘’விடாமுயற்சி வெற்றியைத் தரும்’’ என்பதற்கு
அமைவாக உயர்தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று வெற்றி பெற்றார்.
அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழுவின் மாவட்ட
வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் குருநாகல் மாவட்டத்தில் இருந்து ரஜரட்ட பல்கலைக்கழகத்தின்
வைத்திய பீடத்துக்கு தெரிவானார். இன்ஷா
அல்லாஹ் இன்னும் ஆறு வருடங்களில் பம்மனையில்
முதல் முஸ்லிம் பெண் வைத்தியராக வரவேண்டும் என Bammanna Voice இணையத்தளம் சார்பாக வாழ்த்துகிறோம்.
Congratulations
ReplyDeleteCongratulations ⚘
DeleteDear fellow, On This achievement,I wish you hearty congratulations...🤝♥️ You truly deserve it,and I'm so proud and happy for you 😍😍 Good going and all the very best dear!!!🙌💫
ReplyDeleteMasha Allah dr.
ReplyDeleteMasha allah dr
ReplyDeleteMasha Allah... Proud to be a Qamarian❤
ReplyDeleteMy heartfelt congratulation and best wishes to you on your hard-earned success������
ReplyDeleteWishing you more success for your future��
May Allah fulfill your dream
����