பம்மனையில் முதல் விஞ்ஞானப் பட்டதாரி (பௌதிகவியல்) Z.A ஆதிப்
பம்மனையில் முதல் விஞ்ஞானப் பட்டதாரி
(பௌதிகவியல்) Z.A ஆதிப்
பம்மனையில்
முதல் விஞ்ஞானப் பட்டதாரி (பௌதிகவியல்) Z.A ஆதிப்
இவர் முன்னாள் வட்டாரக் கல்வி அதிகாரி காலம் சென்ற
திரு. செய்னுல் ஆப்தீன் அவர்களினதும் ஓய்வு பெற்ற ஆசிரியையான திருமதி. ருஹைலா அவர்களினதும்
புதல்வர் ஆவார் .
ஆரம்பக் கல்வியை பம்மன்ன அல்-கமர் மத்திய
கல்லூரியில் தொடர்ந்த இவர் கல்விப்
பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொண்டார். தனது பாடசாலைக் காலத்தில் விளையாட்டுத்
துறைகளில் சிறந்து விளங்கினார்.
பின்னர்
உயர்கல்வியை கணிதத்துறையில் பயில்வதற்காக கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் அனுமதியை
பெற்றுக் கொண்டார். ஆனாலும் உயர்தரப்
பரீட்சையை சியம்பலகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையில் இருந்து கணிதத்துறையில் தோற்றி
சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொண்டார்.
பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பௌதிக
விஞ்ஞான துறையில் தனது பட்டத்தை நிறைவு செய்து கொண்டார். அதன் பின்னர் சிறிது காலம் வெளிநாட்டில் தொழில்
புரிந்த ஆதிப் பின்னர் மீண்டும் இலங்கைக்கு வருகைதந்து சுங்க திணைக்களத்தின் சுங்க அத்தியட்சகராக தனது
பணியினை ஆரம்பித்தார். இன்றும் இலங்கையின்
சுங்க திணைக்களத்தில் சுங்க அத்தியட்சகராக
கடமையாற்றுகின்ற அவருக்கு எமது இணையதளம் சார்பாக வாழ்த்துக்கள்.
No comments