சர்வதேச நீரிழிவு நோய் தினம்
நீரிழிவு
நோய்
இன்று நவம்பர் மாதம் 14 ஆம்
தேதி இன்றைய தினம் சர்வதேச நீரிழிவு நோய் தினம்
ஆகும்.
அதற்காக வழங்கப்படுகின்ற
சிறப்பு கட்டுரையே இது
நீரிழிவு நோய் என்றால் என்ன?
இது ஒரு பரவாத நோய் ஆகும். மனித உடலில்
சராசரியாக குளுக்கோசின் அளவு 90 mg/dL முதல்
110 mg/dL. வரையிலான அளவு காணப்படுதல் வேண்டும். இதன்
அளவு அதிகரித்தால் அந்த நிலைமையை நாங்கள் நீரிழிவு நோய் என அழைக்கின்றோம்.
இந்த நிலைமை படிப்படியாக அதிகரித்துச் செல்வதே இந்த நோயின் மிக முக்கியமான
விபரீதமாக உள்ளது. நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான பிரதான
காரணங்களாக பின்வருவனவற்றை குறிப்பிட
முடியும்
·
உடல் ஆரோக்கியம் பற்றிய எமது அசமந்தப்போக்கு
·
உரிய மருத்துவ ஆலோசனை இன்றி மருந்துகளைப் பயன்படுத்துதல்.
·
ஒழுங்கான உணவுப்பழக்கம் ஒன்றினை மேற்கொள்ளலாமை
·
அதிகமாக மனம் சோர்வடைதல்.
·
நிறைவேறாத ஆசைகள் மீது அதிக நம்பிக்கை வைத்தல்.
·
போதிய உடற்பயிற்சியின்மை.
·
போதிய அளவு தூக்கமின்மை.
·
அதிகமான மாப்பொருள் உணவுகளை உட்கொள்ளுதல்.
·
ஆலோசனைகளை பின்பற்றாமை
போன்ற காரணங்களை இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்களாகக் கூறலாம் .
நோய்
ஏற்பட்ட ஒருவரின் நிலை
குளுக்கோஸ் பரிசோதனைகள்
செய்யும் பொழுது குருதியில் குளுக்கோசின் அளவு 110 mg/dL. எனும் பெறுமானத்திலும் அதிகரித்த
நிலையை நாங்கள் நீரிழிவு நோய் என அழைக்கின்றோம். இந்த நிலைமை கட்டுப்பாடின்றி
அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். இவ்வாறு அதிகரிக்கும் நபர்களை நாம் நீரிழிவு நோயாளி என அழைக்கின்றோம்.
·
நீரிழிவு நோயாளிகளுக்கான
அறிகுறிகள்
·
அதிகமான தாகம் எடுத்தல்
·
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
·
அதிக பசி ஏற்படுதல்
·
திடீரென உடல் நிறையின் வீழ்ச்சி அடைதல்
·
தூக்கம் அதிகரித்தல்
நீரிழிவு
நோய்க்காக செய்யக்கூடிய பரிசோதனைகள்
1)Fasting blood sugar test.
பரிசோதனை மிகவும்
இலகுவாக செய்யக்கூடியது. சிறந்த பரிசோதனையாக கருதப்படுகின்றது. பொதுவாக எல்லோராலும் இப்பரிசோதனையை மேற்கொள்ள
முடியும்.
இப்பரிசோதனையின் போது 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள் எந்தவிதமான உணவுகளையும் அருந்தாமல் இருந்து 10 மணித்தியாலங்கள் நிறைவு பெற்றதன் பின்னர் தமது குருதியில் காணப்படுகின்ற குளுக்கோசின் அளவினை பரிசோதிக்கின்ற முறை,
இந்தப் பத்து மணித்தியாலங்களுக்குள் உணவுகள் உட்கொள்ளக்கூடாது 10 மணித்தியாலங்களுக்கு முன்னர் உரிய முறையிலான
மருந்துகள் எடுக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.
தேவை ஏற்பட்டால் நீர் அருந்துவதில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. ஆனால்
இரத்தம் வழங்குவதற்கு ஒரு மணித்தியாலங்களுக்கு முன்னர் நீர் அருந்தாமல் இருப்பதும்
சிறந்தது.
2) Post
Prandial Blood Sugar Test (PPBS)
இது உணவு அருந்திய பின்னர் இரண்டு மணித்தியாலங்களில்
எடுக்கப்படுகின்ற பரிசோதனை முறையாகும்.
உணவை உட்கொள்ள ஆரம்பிக்கின்ற நேரத்தில் இருந்து இரண்டு மணித்தியாலங்களின்
பின்னர் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் 2 மணித்தியாலங்களாக எந்தவித உணவும்
உட்கொள்ள கூடாது. இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் நீங்கள் வழமையாக பாவித்த மருந்துகளை பாவித்தல் வேண்டும். இப் பரிசோதனையின்போது குருதியில் குளுக்கோசின்
அளவு 180 mg/dL. இலும் அதிகரிக்குமே ஆனால் நீரிழிவு
நோயாளி என்று அடையாளப்படுத்த முடியும்.
.
3) HbA1C test
இது மிகவும் சிறந்த பரிசோதனையாகும். ஓரளவு செலவு
கூடிய முறை என்றாலும் இதனால் கிடைக்கும் முடிவு மிகவும் திருப்திகரமானது 40 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் முதலில் இந்தப்
பரிசோதனை ஒன்றை செய்வதன் மூலம் தான் நீரிழிவு நோயாலியா? சுகதேகியாக? என உறுதியாக அறிந்து கொள்ள முடியும்.
இப் பரிசோதனையின்போது குருதியில் குளுக்கோசின் அளவு 6.5%. இலும் அதிகரிக்குமே ஆனால் நீரிழிவு நோயாளி என்று அடையாளப்படுத்த முடியும்.
40
வயதுக்கு மேற்பட்ட பின்வரும் நோய் அறிகுறிகள் காணப்படுகின்றவர்கள் நிச்சயமாக
இந்தப் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் சிறந்தது உயர் குருதி அமுக்கம், , இருதய
நோய், சிறுநீரக சார்ந்த பிரச்சினைகள்,
கொலஸ்திரோல் சார்ந்த பிரச்சினைகள், அதிக உடற்பருமன் போன்றவை.
4)
சிறுநீர் பரிசோதனை
இதன்
மூலம் எங்களுக்கு நீரிழிவு நோய் பற்றி உறுதியான முடிவு ஒன்றினை பெற்றுக்கொள்ள
முடியாது இருப்பினும் அவ்வப்போது எமது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.
இந்த
பரிசோதனையின் முடிவை வைத்துக்கொண்டு எங்களுக்கு நீரிழிவு நோய் என எந்தவிதமான முடிவுக்கும்
வரமுடியாது. மருந்துகளையும் பயன்படுத்துவதும் நல்ல முறையாக கொள்ள முடியாது.
நீரிழிவு
நோயிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்
·
வைத்திய ஆலோசனைகளை முற்றுமுழுதாக
பின்பற்றுதல்.
·
மருந்துகளை உரிய முறையில் எடுத்தல்.
·
போதிய அளவு நீர் அருந்துதல்.
·
உடற்பயிற்சி செய்தல்
·
மனச் சோர்வை தவிர்த்துக் கொள்ளுதல்.
· மாப்பொருள் உணவுகளை குறைத்துக் கொள்ளுதல்.
·
தேவை ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் குருதிப்
பரிசோதனைகளை மேற்கொள்ளல்
நாட்பட்ட நீரிழிவு நோயினால்
ஏற்படக்கூடியவை
· சிறுநீரகங்கள் செயல் இழக்கலாம்,
சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டி ஏற்படலாம்
·
மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
·
பார்வையை இழக்க வேண்டி
ஏற்படலாம்
· கை,கால் என்பவற்றில் ஏற்படும் ஊனங்கள்
காரணமாக அப்பகுதிகளை நீக்க வேண்டி ஏற்படலாம்
இந்த
நோயிலிருந்து தம்மையும் தமது சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அனைவரும் இன்றைய
சர்வதேச நீரிழிவு தினத்திலிருந்து செயற்படுவோம்
எனக்கூறி நிறைவு செய்கிறேன் நன்றி
’’நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்’’
No comments