கமர்
1945ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பம்மனை முஸ்லிம் வித்தியாலயம் பல படிகளைத் தாண்டி மகா வித்தியாலயமாகவும் பின்னர் மத்திய கல்லூரியாகவும் உயர்வு பெற்றுள்ளது. எதிர்காலத்தில் தேசிய பாடசாலையாக
மாறுவதற்கு பிராத்திப்போம். இக்கல்லூரி
தனது பொன் விழாவை 1995 ஆண்டு கொண்டாடியது. அதன் பின்னரே இது மத்திய கல்லூரியாக உயர்த்தப்பட்டது.
திரு. A.l.M.
நைனா
மரிக்காரை முதல் அதிபராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அல் - கமர் மத்திய கல்லூரியின்
தற்போது 37 அதிபர்களை தாண்டி முப்பத்தி
எட்டாவது அதிபராக திரு.கே. எம். நிசான் அதிபர் கல்லூரியை பொறுப்பேற்றுள்ளார்.
திரு. எம். எஸ். எம். ரிபாய் ஆசிரியர் பிரதி அதிபராக
இருந்த காலத்தில் 31 ஆவது அதிபராக
கடமையாற்றிய திரு எச்.எம் மனாப் அதிபர்
பாடசாலையை வழி நடத்தும் போதே அல் - கமர்
மத்திய கல்லூரி தனது பொன் விழா கொண்டாட்டங்களை சிறப்புற கொண்டாடியது. விழாக்கு திரு எச்.எம் மனாப் அதிபர் தலைமை தாங்கியது உடன் அப்போதைய கல்வி
அமைச்சராக இருந்த திருவாளர். ஆர்.பதிரன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அன்றைய தினமே இந்த பொன்விழா மலர் வெளியீடு நடைபெற்றது.
1995 ஆம் ஆண்டே கல்லூரி பொன்விழா
கண்ட போதிலும் இதற்கான விழா ஏற்பாடுகள் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்றது அப்போது வெளியிடப்பட்ட மலரின் பகுதியை நீங்கள்
மேலே காணலாம்.
இந்த இதழுக்கு இதழாசிரியராக திரு Z
.A. ஜெஸ்லி
ஆசிரியர் அவர்கள் கடமையாற்றியதுடன் இந்த இதழை செவ்வனே வெளியிட்டார். பலரது ஆசிச்
செய்திகளை சுமந்து வந்த இந்த மலர் பல கட்டுரைகள்,கவிதைகளை
கொண்டதாகவும், மாணவர்களின் ஆக்கங்கள்
நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.
அதேபோன்று இந்த இதழில் மிக முக்கியமான குறிப்பு
என்னவென்றால் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் பாடசாலையில் பொன்விழா
கொண்டாடும் தினம் வரையிலான காலப்பகுதியில் கடமையாற்றிய சகல ஆசிரியர்களினதும்
பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது.
பம்மனையின்
வரலாற்றை குறிப்பிடப்பட்டிருப்பது இதில் ஒரு முக்கிய விடயமாக கொள்ளக்கூடியதாகள்ளது. இந்த நூலுக்கான அறிமுகத்தை செய்வதன்
நோக்கம் எமது கல்லூரியின் பழைய நினைவுகளை
மீட்டிக் கொள்வதற்காகவும் மேலும் பல வெற்றிப்
பாதைகளை தாண்டிச் செல்வதற்கு கமருக்கு
எமது இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்கள்.
No comments